இந்தியக் கடற்படையின் தலைமைப் பொருள் அதிகாரி வைஸ் அட்மிரல் பி. சிவகுமார், ஏவிஎஸ்எம், விஎஸ்எம் மாதிரியை திறந்து வைத்தார். கடல்சார் விழிப்புணர்வை அதிகரிப்பதுடன், இளைஞர்களை இந்தியக் கடற்படையில் சேர ஊக்குவிப்பதும் இதன் நோக்கமாகும்.
புராஜெக்ட் 17ஏ திட்டத்தின் முன்னணிக் கப்பலான ஐ.என்.எஸ். நீலகிரி, பிரதமர் நரேந்திர மோடியால் 2025 ஜனவரி 15-ல் மும்பை கடற்படை கப்பல்தளத்தில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. உள்நாட்டிலேயே வடிவமைத்து கட்டப்பட்ட இக்கப்பல், ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் இந்தியாவின் பாதுகாப்புத் துறை தற்சார்பை வெளிப்படுத்துகிறது.
மும்பை மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்பட்ட இக்கப்பலின் மாதிரியை ரத்னகிரியைச் சேர்ந்த சிவாரெட்டி வடிவமைத்துள்ளார். காட்சித்தளத்தை கோவையைச் சேர்ந்த லார்சன் & டூப்ரோ நிறுவனம் அமைத்துள்ளது.
விழாவில் அக்ராணி கட்டளை அதிகாரி கமோடோர் மன்மோகன் சிங், ராணுவம் மற்றும் விமானப்படை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



Leave a Reply