கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுதன் தலைமையில், கோவை மாநகர காவல் ஆணையரிடம் இன்று புகார் மனு அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேற்று மயிலாடுதுறையில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்த சம்பவத்தை கண்டித்து, கோவை மாவட்டத்திலும் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளனர்
மேலும், மயிலாடுதுறையில் தாக்கப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், “இளைஞர்களின் மிகப்பெரிய எழுச்சியாக இந்த தேர்தல் அமைந்துள்ளது. தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளித்த சூழலில் இத்தகைய தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுவது கண்டனத்திற்குரியது,” என்றும் அவர் தெரிவித்தார்.



Leave a Reply