சாதி, மதமற்றவர் என சான்றிதழ் வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், திரைப்பட இயக்குநர் பார்த்திபனுக்கு ஒரு வாரத்திற்குள் உரிய சான்றிதழை வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இயக்குநர் பார்த்திபன், தன்னை சாதி மற்றும் மத அடையாளங்களிலிருந்து விடுபட்டவராக அங்கீகரிக்கும் வகையில் அதிகாரப்பூர்வ சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அவர் “NO” என்ற வடிவில் வடிவமைக்கப்பட்ட கண்ணாடி அணிந்து நீதிமன்றத்தில் ஆஜரானது கவனத்தை ஈர்த்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து, சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் அலுவலகம் ஒரு வாரத்திற்குள் தேவையான நடவடிக்கை எடுத்து, சாதி, மதமற்றவர் என சான்றிதழ் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த சம்பவம் சமூகத்தில் சாதி மற்றும் மத அடையாளங்களை மீறும் சிந்தனையை மீண்டும் பேசுபொருளாக மாற்றியுள்ளது.



Leave a Reply