அம்மன் கே அர்ச்சுணன் தலைமையில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆலோசனை கூட்டம்

Spread the love

கோவையில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆலோசனை கூட்டம் கோவை மாநகர மாவட்ட செயலாளர் அம்மன் கே அர்ச்சுணன் தலைமையில் நடைபெற்றது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் ஆணைக்கிணங்க, கோவை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பாக மூன்று தொகுதிகளுக்கு உட்பட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
தமிழக மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பெற்று, பத்தாண்டு காலம் தமிழகத்தில் நல்லாட்சி புரிந்த அதிமுகவின் கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் மற்றும் முன்னாள் மேயர் ஏ.எம்.ஏ. வேலுச்சாமி அவர்களின் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், கழக அம்மா பேரவை இணைச் செயலாளர் மற்றும் எம்.ஜி.ஆர் இளைஞரணிச் செயலாளர் கே.ஆர். ஜெயராமன், கழகத் துணைச் செயலாளர் மற்றும் முன்னாள் மாவட்ட உறுப்பினர் துரைசாமி, பொருளாளர் பார்த்திபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், முன்னாள் துணை மேயரும் இணைச் செயலாளருமான லீலாவதி உன்னி, துணைச் செயலாளர் சிங்கை வசந்தி, மாநில மகளிர் அணி இணைச் செயலாளரும் செய்தி தொடர்பாளருமான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மகேஸ்வரி, மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் தோப்பு அசோகன் மற்றும் மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் புரட்சித்தம்பி உட்பட மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பலரும் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பேசிய கோவை மாநகர மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே அர்ச்சுணன் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் மக்கள் நலத் திட்டங்களையும், ஏழை எளிய ரிட்சா தொழிலாளர்கள் முதல் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அதிமுக அரசு செய்த சாதனைகளையும் சுட்டிக்காட்டிப் பேசினர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் வழிநடத்துதலில் கட்சியின் பலம் மேலும் அதிகரித்து வருவதாகவும், வரவிருக்கும் தேர்தல்களில் கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்றும் நிர்வாகிகள் மேடையில் முழக்கமிட்டனர். இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் கோவையின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான அதிமுக தொண்டர்கள், மகளிர் அணியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு நிர்வாகிகளின் உரைகளை உற்சாகத்துடன் கேட்டு ரசித்தனர். இக்கூட்டம் கோவையில் அதிமுகவினரிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *