திங்கள்கிழமை விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை முதல் கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும் வழக்கமான கட்டணத்தை விட அதிகமாக, ரூ.4,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதால் பயணிகள் கடும் அதிர்ச்சியும் அவதியும் அடைந்துள்ளனர்.
பண்டிகைக் காலத்தில் இந்த அநியாயக் கட்டண உயர்வைத் தடுக்க தமிழக அரசும் போக்குவரத்துத் துறையும் உடனடியாகத் தலையிட்டு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Leave a Reply