, ,

நாளை மறுநாள் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தொடக்கம்: முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்!

Spread the love

தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குப் பிறந்த பரிசாக 1 கிராமில் 22 கேரட் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை முதலமைச்சர் விஜய் வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி மதுரை உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் நேரில் தொடங்கி வைக்கவுள்ளார். அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்கள் தங்களது குழந்தைகளுடன் வீட்டிற்குச் செல்லும்போது இந்த தங்க மோதிரம் வழங்கப்படும். முதற்கட்டமாக 1,28,000 தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. மேலும், 2026 ஜூன் 22 முதல் பிறந்த குழந்தைகளுக்கு 107 சிறப்பு மையங்கள் மூலம் நாளொன்றுக்கு 100 குழந்தைகள் வீதம் இந்த மோதிரங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.

இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ள ஒவ்வொரு தங்க மோதிரத்திற்கும் தனித்துவமான வரிசை எண் (Unique Serial Number) பொறிக்கப்பட்டு, பாதுகாப்பான பேக்கிங்கில் வழங்கப்படவுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த நிரந்தரவாசிகளாகவும், PICME வலைதளத்தில் பதிவு செய்து RCHID எண் பெற்ற தாய்மார்களுக்கும் இத்திட்டம் நேரடியாகப் போய் சேரும். தற்போது இடைத்தேர்தல் நடைமுறையில் உள்ள செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களைத் தவிர்த்து, மாநிலத்தின் மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் ஒரே நேரத்தில் அமலுக்கு வருகிறது.