Tag: #dmk

  • கோவையில் தமிழ்ப்புதல்வன் திட்டதைத் தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் …..

    அரசு பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் ‘தமிழ் புதல்வன்’ என்கிற திட்டத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தியிருக்கிறார். இந்த திட்டத்தின் கீழ் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் வங்கி கணக்கில் மாதம் 1000  ரூபாய் நேரடியாக செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததுது. இந்தத் திட்டத்தை கோவை அரசு கல்லூரியில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் அரசு மற்றும்…

  • வினேஷ் போகத்துக்கு தமிழநாடு முதலமைச்சர் ஆதரவு ……

    ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  ஆதரவு தெரிவித்து உள்ளார்.  நீங்கள் ஒவ்வொரு வகையிலும் உண்மையான சாம்பியன் என்று வினேஷ் போகத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், ‘வினேஷ், நீங்கள் ஒவ்வொரு வகையிலும் உண்மையான சாம்பியன். உங்கள் பின்னடைவு, வலிமை, இறுதிப் போட்டிக்கான பயணம் கோடிக்கணக்கான இந்திய மகள்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. சில…

  • தமிழ்நாடு முழுவதும் 100 அமுதம் அங்காடிகள் – தமிழக அரசு அறிவிப்பு….

    தமிழகம் முழுவதும் புதிதாக 100 அமுதம் அங்காடிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உணவுப்பொருள் வழங்கல் துறை தகவல் தெரிவித்துள்ளது.  டிபார்ட்மெண்ட் கடைகளைப் போல  பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை தாங்கே எடுத்துக்கொள்ளும் வகையில் இந்த கடைகள் அமைக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். முதற்கட்டமாக கோபாலபுரத்தில்  ஏற்கனவே இருந்த அமுதம் அங்காடி அண்மையில் விரிவுபடுத்தப்பட்டது. அதன்படி அமுதம் அங்காடியில் எந்தெந்த பொருள்கள் எல்லாம் அதிகம் விற்பனை ஆகின்றன என்பது கணக்கெடுக்கப்பட்டு, அந்த பொருட்கள் தட்டுப்பாடு இன்றி…

  • தமிழ்ப் புதல்வன் திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…..!

    அரசு பள்ளியில் படித்து கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். ஏற்கனவே  அரசுப் பள்ளிகளில் படித்துக் கல்லூரிகளில் சேரும் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டம் இளைய சமுதாயத்தினரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த  திட்டத்தால் 3 இலட்சம் மகளிருக்கு மேல் பயன்பெற்றுள்ளனர். அதேபோல, பள்ளிக் கல்விமுடித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரித்திட, அவர்களுக்கும் மாதம் 1,000 ரூபாய்…

  • முதல்வர் திறப்புக்கு தயாரான பாலம் ! பாலத்தில் மிளிருது வண்ண விளக்குகளின் வர்ணஜாலம் !!

    கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த உக்கடம் – ஆத்துப்பாலம் சாலையில், நெரிசலை குறைக்க ரூ.481 கோடி செலவில் கட்டப்பட்ட மேம்பாலம் பணிகள் நிறைவடைந்துவிட்டன. இந்த பாலத்தை நாளை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கின்றார். தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கோவையில் முக்கியமான வணிக மையமான உக்கடம் பகுதி விளங்குகிறது. சென்னையின் தி. நகரைப் போல கோவையிந் உக்கடம் பகுதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள் அமைந்து உள்ளன. உக்கடத்தை ஒட்டிய…

  • ஆகஸ்டு 13ந்தேதி கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்…….

    தமிழக அமைச்சரவை கூட்டம் ​ஆகஸ்ட் 13​ ஆம் தேதி கூடுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.​ இது​குறித்து தொடர்பாக தமிழ்நாடு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  சென்னை தலைமைச் செயலகத்தில் வரும் ஆக. 13 ஆம் தேதி காலை 11 மணிக்கு அமைச்சரவை கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் விவாதிக்கப்படும் பொருள்கள் குறித்த குறிப்பு தனியே அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • சொத்து குவிப்பு வழக்கு: விடுதலையை ரத்து செய்தது ஐகோர்ட்……!

    சொத்துக் குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோரை விடுவித்த கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் விசாரித்து வந்தது. பின்னர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என அமைச்சர்கள் தரப்பில் தொடரப்பட்ட மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்றம், சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு, அவரது மனைவி மற்றும் அமைச்சர்…

  • மத்திய அரசை கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

    பாஜக அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காததை கண்டித்து ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில், கோவை டாடாபாத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை சிவானந்த காலனி டாடாபாத் சாலையில், மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், வடக்கு மாவட்ட செயலாளர் தொஅ.ரவி, தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோர் முன்னிலையில், எம்பி கணபதி ராஜ்குமார், தலைமையில் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர்கள் பொங்களூர் பழினிச்சாமி, மு.கண்ணப்பன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து…

  • 2024 – 2025 பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள் :-

    2024-25-ம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 7வது முறையாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 3வது முறையாக பிரதமரான மோடி தலைமையிலான கூட்டணி அரசின் முதல் நிதிநிலை அறிக்கை இதுவாகும். ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆற்றிய பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்: *மோடி 3வது முறையாக பிரதமரான பின் முதல்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசின் மீது மக்கள் நம்பிக்கை வைத்து…

  • காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம்…………….!

    காவிரி விவகாரம் தொடர்பாக சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சட்ட நிபுணர்கள் கூட்டத்தில் பங்கேற்பு அதிமுக சார்பில் எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன், விசிக சார்பில் திருமாவளவன், எஸ்.எஸ்.பாலாஜி, காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை, மமக சார்பில் ஜவாஹிருல்லா, தவாக சார்பில் வேல்முருகன், கொமதேக சார்பில் ஈஸ்வரன், பாமக சார்பில் ஜி.கே.மணி, சதாசிவம், பாஜக சார்பில் கரு.நாகராஜன், முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்பு.