Tag: #coimbatore
-
முதலமைச்சரின் தனிச் செயலாளராக உமாநாத் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தலைமைச்செயலாளர் முருகானந்தம் வெளியிட்டு உள்ளார். இன்று முதலமைச்சரின் முதல் தனிச் செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2வது தனிச்செயலாளராக சண்முகம் ஐஏஎஸ், 3வது தனிச் செயலாளராக அனு ஜார்ஜ் ஐஏஎஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். முதலமைச்சரின் முதல் தனிச்செயலாளராக இருந்த முருகானந்தம் ஐஏஎஸ், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்ற நிலையில், இந்த மாற்றம் நடைபெற்றுள்ளது.
-
தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் 10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 5-ம் தேதி அடையாள வேலை நிறுத்தம் செய்ய உள்ளோம்” என தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்ர மணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த…
-
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மாவீரன் ஒண்டிவீரன் அவர்களின் 253வது நினைவு நாளை முன்னிட்டு தேசிய தாழ்த்தப்பட்டோர் மக்கள் நல உரிமை இயக்கம் சார்பாக துடியலூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் விழாவை துவக்கி வைத்தார் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பி ஆர் ஜி அருண்குமார். உடன் ஆசிரியபெருமக்கள், கட்சியினர்.
-
தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்கு செல்லும் சாலையில் அமைந்துள்ள பாஸ்ட் டேக் நுழைவு கட்டண சோதனை சாவடியில், இருபுறமும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்தது. எனவே கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பாஸ்ட் டேக் மற்றும் சோதனை சாவடியை மாற்று இடத்திற்கு அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. மேலும் சோதனை சாவடிக்கு கேபிள் ஓயர்கள் அமைக்கும் பணிகளும், சாலையில் இன்டர்லாக் கற்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது நுழைவு கட்டணம் மற்றும் சோதனை சாவடி அமைப்பதற்கான இறுதி கட்டப்…
-
கோவை செல்வபுரம் ஹயாத்துல் இஸ்லாம் சுன்னத் ஜமாத் மகாசபை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள ஹயாத்துல் இஸ்லாம் சுன்னத் ஜமாத் மகாசபை கூட்டம் பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள மதரஸா அரங்கில் நடைபெற்றது. கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் தலைவர் ஹாஜி பஷீர் அஹமத் தலைமையில் நடைபெற்ற இதில் ஹயாத்துல் இஸ்லாம் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் புதிய தலைவராக இப்ராஹிம், செயலாளராக ஹைதர் அலி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக ஜமாத்…
-
சூலூர் முன்னாள் விமானப்படை வீரர்கள் சங்கம் சார்பாக வயநாடு இயற்கை பேரிடர் நிவாரண நிதியாக ரூ.75000 தொகை வயநாடு விமானப்படை வீரர்கள் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சூலூர் முன்னாள் விமானப்படை வீரர்கள் சங்கத்தின் தலைவர் அப்துல் ஹக்கீம் பொதுச் செயலாளர் திரு.சோ. ரமேஷ்குமார் பொருளாளர் திரு.தேனப்பன் மற்றும் சங்க நிர்வாகிகள் எஸ் சுப்ரமணியம். தனுஸ்கோடி இன்னும் பலர் கலந்து கொண்டனர். வயநாடு விமானப் படை சங்கம் சார்பில் நிர்வாகிகள் லாசர், கிருஷ்ணன் குட்டி மற்றும் அப்துல் ஹசீஸ்…
-
இளங்கலை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான தகுதி பெற்ற மாணவர்களின் தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், 2024- 25 ஆம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார். தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்குகிறது. இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கு 43,063 பேர் விண்ணப்பித்துள்ளனர்.…
-
லயன்ஸ் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ஸ்பின் சிட்டி சங்கத்தின் 33-ஆம் ஆண்டு பதவியேற்பு விழாவில் லயன் ஆனந்த் தலைவராக பொறுப் பேற்றுக் கொண்டார். எம்ஜேஎஃப் லயன் வி.ஆனந்தன் தலைவராகவும், லயன் ஆர்.பி.சுந்தர ராஜன் செயலாளராகவும், லயன் கே.நாகமாணிக்கம் பொருளாளராகவும் பொறுப்பேற்றனர். லயன்ஸ் இந்தாண்டு சேவை திட்டங்கள் கல்வி உதவித் தொகை லயன் சுபா சுப்பிரமணியம் மற்றும் லயன் ராமசுப்பிரமணியன் வழங்கினார்கள், காது கேட்கும் கருவி மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் கேரளா வயநாட்டிற்கு நிவாரணத் தொகை…
-
அகத்தியன் தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் காலத்தில் காவிரி பூம்பட்டிணத்தில் இந்திர விழாவை எடுப்பித்தவர் ஆவார். புதுச்சேரிக்கு அருகிலுள்ள ‘உழவர் கரை’ என்ற இடத்தில் ஆசிரமம் அமைத்து வேதபுரி பல்கலைக்கழகத்தில் தமிழைப் போதித்தார். எனவே அவர் தங்கியிருந்த பகுதி ‘அகத்தீஸ்வரம்’ என்று அழைக்கப்பட்டு அங்குப் பெரிய சிவாலயம் கட்டப்பட்டது. அதனை அகத்தீஸ்வரமுடையார் ஆலயம் என்றும் அழைக்கின்றனர். தென் திசைக்கு வந்த அகத்தியன், பொதிகை மலையில் தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படி அகத்தியம் என்னும் நூலை இயற்றினார். இராமபிரானுக்குச் சிவகீதையை…
-
காங்கோ, மத்திய ஆப்பிரிக்கா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கு அம்மை பரவியுள்ள நிலையில், இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. எம்.பாக்ஸ் என்று அழைக்கப்படும் குரங்கு அம்மை ஒரு அரிய வகை தொற்று நோய் ஆகும். இது மனிதர்களுக்கு இடையே எளிதில் பரவாது. ஆனால் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. கொரோனாவைப் போல 2022 ம் ஆண்டு முதல் பரவத் தொடங்கிய இந்த நோயானது முதலில் ஆப்பிரிக்க நாடுகளில் கண்டறியப்பட்டது. தற்போது,…