சென்னையில் இருந்து திருப்பதிக்குச் சிறப்புப் பேருந்துகள்: போக்குவரத்துத் கழகம் அதிரடி அறிவிப்பு!

Spread the love

திருப்பதி திருமலையில் கோலாகலமாக நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழா மற்றும் வரவிருக்கும் மகாளய அமாவாசைத் திருநாளை முன்னிட்டு, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்தும் சென்னையில் இருந்தும் திருப்பதிக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

பக்தர்களின் பயண வசதியை உறுதி செய்யும் பொருட்டு சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோவை, மதுரை, நெல்லை, நாகர்கோவில் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டத் தலைநகரங்களில் இருந்து திருப்பதிக்கு நேரடியாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல, திருப்பதியில் இருந்து மீண்டும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குத் திரும்பும் வகையில் இன்று முதல் வரும் 21-ஆம் தேதி வரை தினசரி 150 சிறப்புப் பேருந்துகள் பக்தர்களின் தேவைக்கேற்ப இயக்கப்பட உள்ளன.

இதுதவிர, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூரு போன்ற இடங்களுக்குப் பயணிப்பவர்களுக்காக நாளை (வெள்ளிக்கிழமை) 210 சிறப்புப் பேருந்துகளும், சனிக்கிழமை அன்று 180 சிறப்புப் பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *