நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி! சவரனுக்கு ரூ.960 உயர்ந்த தங்கம் விலை!

Spread the love

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவம்பர் 26) ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.960 அதிகரித்து ரூ.92,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.120 உயர்ந்து, தற்போது ரூ.11,540-க்கு விற்பனையாகி வருகிறது. இதேபோல், ஒரு சவரன் (8 கிராம்) தங்கம் ரூ.960 உயர்ந்து ரூ.92,320-க்கு எட்டியுள்ளது. சமீப நாட்களாகத் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், இன்றைய இந்த அதிரடி உயர்வு நகை வாங்கத் திட்டமிட்டிருந்த பொதுமக்கள் மற்றும் நகைப் பிரியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரம், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் நீடிக்கிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.165-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.