தொடர்ந்து 9-வது ஆண்டாக முதலிடம்! கோவையின் நெ.1 மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக கே.எம்.சி.ஹெச் சாதனை!

Spread the love

இந்திய மருத்துவமனைகளின் செயல்திறனை ஆராய்ந்து, அதனடிப்படையில் பிரபல ஆங்கிலப் பத்திரிகையான ‘தி வீக்’ (The Week) வருடாவருடம் சர்வே நடத்தி வருகிறது. ‘தி வீக் – ஹன்சா ரிசர்ச் சர்வே: இந்தியாவின் சிறந்த மருத்துவமனைகள் 2026’ என்ற இதன் சமீபத்திய ஆய்வறிக்கையின்படி, கே.எம்.சி.ஹெச் (KMCH) மருத்துவமனை இந்த வருடத்திற்கான கோவையின் நெ.1 மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக கே.எம்.சி.ஹெச் இந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கடுமையான ஆய்வுகள் மற்றும் போட்டிகளுக்கிடையே இந்த விருதையும் அங்கீகாரத்தையும் தொடர்ந்து பெற்றுவருவது தனிச்சிறப்பு வாய்ந்ததாகும்.

தி வீக் பத்திரிகை சார்பில் புது டெல்லியில் நடைபெற்ற விழாவில், கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் சிவகுமரன்  ‘கோவையின் நெ. 1 மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனை’ என்ற பெருமைமிகு விருதை, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் கே. ஜி. அருண்ராஜிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

இந்தியாவின் சிறந்த மருத்துவமனைகளை மதிப்பீடு செய்யும் தி வீக் – ஹன்சா ரிசர்ச் சர்வே, நாட்டின் முக்கிய மருத்துவ மையங்களாக விளங்கும் தலைநகரப் பகுதியிலும் இந்தியா முழுவதிலும் தனது சர்வேயை மேற்கொண்டது. மக்கள் மத்தியில் பெற்றிருக்கும் நற்பெயர், மருத்துவர்களின் திறமை, உள்கட்டமைப்பு வசதிகள், ஆராய்ச்சி மற்றும் புதுமைகள், நோயாளிகளுக்குச் சிறந்த மருத்துவ சேவை அளித்தல் ஆகிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தச் சர்வே நடத்தப்பட்டது.

“தி வீக் – ஹன்சா பத்திரிகையின் இந்த ஆய்வானது மருத்துவத் துறையினர் மத்தியில் மிகவும் செல்வாக்கு பெற்றது. எங்களது தனிச்சிறப்பு வாய்ந்த மருத்துவ சேவைக்கும், மருத்துவமனையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் ஊழியர்களின் திறமைக்கும் இந்த விருது ஒரு சிறந்த சான்றாகத் திகழ்கிறது. நகரில் நெ. 1 மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாகத் தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக விருது பெறுவது என்பது மிகவும் மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் உரிய விஷயமாகும். கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்று, என்றும் நம்பிக்கைக்குரிய மருத்துவமனையாகத் திகழ்வதையே இந்த விருது சுட்டிக்காட்டுகிறது” என்று கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் தலைவரும் நிர்வாக இயக்குநருமாகிய டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி தெரிவித்தார்.