கிராமப்புற மக்களுக்கு நிம்மதி செய்தி: கேஸ் சிலிண்டர் பதிவு இடைவெளி 25 நாட்களாக குறைப்பு!

Spread the love

கிராமப்புறங்களில் வசிக்கும் சமையல் எரிவாயு (LPG) நுகர்வோரின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, புதிய சிலிண்டர் பதிவு செய்வதற்கான கால இடைவெளியை 45 நாட்களில் இருந்து 25 நாட்களாகக் குறைத்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி அறிவித்துள்ளார்.

கிராமப் பகுதிகளில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு குடும்பங்கள் மற்றும் தொடர்ச்சியாகச் சமையல் எரிவாயுவைப் பயன்படுத்தும் மக்களுக்கு, பழைய 45 நாட்கள் காத்திருப்பு காலம் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், இந்த நடவடிக்கை அவர்களுக்குப் பெரிய நிம்மதியைத் தந்துள்ளது.

கிராமப் பகுதிகளில் சமையல் எரிவாயு தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்யவும், செயற்கை தட்டுப்பாடுகளைத் தவிர்க்கவும் எடுக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பு, கிராமப்புறப் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.