,

தங்கம் விலை மீண்டும் கிடுகிடு உயர்வு: ஒரு சவரன் ரூ.1,14,000-ஐ கடந்து அதிர்ச்சி!

Spread the love
பொதுமக்கள் தேவையின்றி தங்கத்தை வாங்க வேண்டாம் என்றும், அவ்வாறு தவிரப்பது நாட்டின் பொருளாதாரத்தில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பேசிய கருத்துக்கள் வைரலாகி வருகின்றன. இருப்பினும், தற்போதைய சந்தை நிலவரப்படி சாமானிய மக்கள் விரும்பினாலும் தங்கம் வாங்குவது பெரும் சவாலாகவே மாறியுள்ளது. நேற்று (செப்டம்பர் 7) ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.14,130-க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,13,040-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், இன்று (செப்டம்பர் 8) நகைப்பிரியர்களுக்கு பேரதிர்ச்சி அளிக்கும் விதமாகத் தங்கத்தின் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ரூ.14,270-க்கும், சவரனுக்கு ரூ.1,120 அதிகரித்து ரூ.1,14,160-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலையில் எவ்வித மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,55,000-க்கும் வர்த்தகமாகி வருகிறது.

தங்கத்தை வெறும் ஆபரணமாக வாங்குவதைக் காட்டிலும் சிறந்த முதலீடாகவே வல்லுநர்கள் கருதுகின்றனர். கடந்த ஆண்டை விடத் தங்கத்தின் மீதான முதலீடுகள் கணிசமாக அதிகரித்துள்ளதே இந்த தொடர் விலை உயர்வுக்கு முதன்மை காரணமாகக் கூறப்படுகிறது. தற்போதைய சூழலில் செய்யப்படும் முதலீடுகள் வரும் ஆண்டில் சிறந்த லாபத்தை ஈட்டித் தரும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *