,

கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! – சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Spread the love
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 9 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால், அப்பகுதிகளுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ (Orange Alert) விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அவசியமின்றி வெளியே செல்வதைத் தவிர்க்குமாறும், பாதுகாப்பாக இருக்குமாறும் மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மீட்புப் பணிகளுக்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.