உத்தரப் பிரதேச மாநிலத்தின் மாபெரும் திட்டங்களில் ஒன்றான நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரைச் சூட்ட அம்மாநில அமைச்சரவை முறைப்படி ஒப்புதல் அளித்துள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ‘நரேந்திர மோடி சர்வதேச விமான நிலையம், நொய்டா-ஜெவார்’ எனப் பெயர் மாற்றம் செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.
கௌதம் புத்த நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த பிரம்மாண்ட விமான நிலையம், உத்தரப் பிரதேச மாநிலத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு எனக் குறிப்பிட்ட முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மாநிலத்தின் மிகப்பெரிய போக்குவரத்து மையமாக இது உருவெடுக்கும் என்றும் பெருமிதம் தெரிவித்தார். 2021-ல் அடிக்கல் நாட்டப்பட்டு, இந்த ஆண்டின் தொடக்கத்தில் திறக்கப்பட்ட இந்த விமான நிலையத்தில், உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் வான்வழிப் போக்குவரத்துச் சேவைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.



Leave a Reply