இணைய வழியிலும் தொலைபேசி அழைப்புகள் மூலமும் நடைபெறும் மோசடிகளைத் தடுக்கும் வகையில், ‘ட்ரூகாலர் ஸ்கேம் செக்கர்’ (Truecaller Scam Checker) என்ற புதிய அதிநவீனத் தொழில்நுட்ப வசதியை ட்ரூகாலர் நிறுவனம் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகள், போலி எண்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய இணையதள இணைப்புகளை (Links) பயனர்கள் ஒரே இடத்தில், சில நொடிகளில் சரிபார்க்கும் வகையில் இந்த அம்சம் உருவாக்கப்பட்டுள்ளது.
‘ஸ்கேம் செக்கர்’ மூலம் பயனர்கள் பெறக்கூடிய நன்மைகள்:
-
இணைப்புகளைச் (Link) சரிபார்த்தல்: உங்களுக்கு வரும் மெசேஜ்களில் உள்ள லிங்க் பாதுகாப்பானது தானா அல்லது ஃபிஷிங் (Phishing) முறையில் கணக்கை முடக்கும் ஆபத்து கொண்டதா என்பதை உடனடியாய் கண்டறியலாம்.
-
போலி எண்களை அடையாளம் காணுதல்: ஒரு குறிப்பிட்ட எண்ணைப் பற்றி ட்ரூகாலர் பயனர்கள் அளித்த தகவல்கள் மற்றும் எச்சரிக்கைகளை உடனடியாக அறிந்து கொள்ள முடியும்.
-
சமூக நுண்ணறிவு (Community Reports): இதே போன்ற எண்கள் அல்லது லிங்க் மூலம் மற்றவர்கள் சந்தித்த மோசடி அனுபவங்கள் மற்றும் புகார்களைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
-
சுயமாகப் புகாரளிக்கும் வசதி: சந்தேகத்திற்குரிய எண்கள் குறித்துப் பயனர்களே நேரடியாகத் தகவல்களைப் பதிவு செய்து மற்றவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கலாம்.
“ஒரு சந்தேகத்திற்குரிய அழைப்பு வரும்போது, ஏதோ தவறாக இருக்கிறது என்பதை மக்கள் உணர்கிறார்கள். ஆனால் அதை உடனடியாகச் உறுதிப்படுத்த அவர்களுக்கு ஒரு வழி தேவைப்படுகிறது. இந்த ‘ஸ்கேம் செக்கர்’ அம்சம் மூலம் எண், இணைப்பு மற்றும் தகவல் ஆகிய மூன்றையும் ஒரே இடத்தில் சரிபார்த்து மக்கள் ஏமாறுவதைத் தவிர்க்க முடியும்.”— ரிஷித் ஜுன்ஜுன்வாலா, தலைமை நிர்வாக அதிகாரி (CEO), ட்ரூகாலர்.
எதிர்காலத்தில் ஸ்கிரீன்ஷாட்களைப் பதிவேற்றி ஆய்வு செய்யும் வசதி, விரிவான பகுப்பாய்வு மற்றும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் ‘ஸ்கேம் செக்கர்’ மேலும் மேம்படுத்தப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.



Leave a Reply