-
தொகுதிகள் 50% அதிகரிப்பு: மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 50% உயர்த்தப்படும்.
-
இடங்களின் உச்சவரம்பு: மக்களவையின் மொத்த இடங்கள் 850 ஆகவும், மாநில சட்டப்பேரவைகளின் அதிகபட்ச இட வரம்பு 650 ஆகவும் அதிகரிக்கப்படும்.
-
2029 தேர்தல் இலக்கு: 2029 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே புதிய தொகுதி மறுவரையறை வரைபடம் தயார் செய்யப்படும்.
-
மாநிலப் பிரதிநிதித்துவம்: மாநில வாரியான தொகுதிகளின் பிரதிநிதித்துவ விகிதம் 1971 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும்.
-
மாநிலத்திற்குள் எல்லை மாற்றம்: 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், மாநிலங்களுக்குள் உள்ள தொகுதிகளின் எல்லைகள் மாற்றியமைக்கப்படும்.
-
மகளிர் இடஒதுக்கீடு: மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் 33% இடங்கள் மகளிருக்கு ஒதுக்கப்படும்; இந்த இடஒதுக்கீடு 15 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.
புதிய தொகுதி மறுவரையறை மசோதா: மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளை 50% உயர்த்த வழிவகை!

அனைத்து மாநிலங்களிலும் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் உயர்த்த வழிவகை செய்யும் புதிய தொகுதி மறுவரையறை மசோதாவின் நகல் வெளியாகியுள்ளது. 2051-ஆம் ஆண்டு வரை மக்கள்தொகையின் அடிப்படையில் மாநிலங்களின் பிரதிநிதித்துவ விகிதத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்றும், மகளிர் இடஒதுக்கீடு (33%) சட்டத்தை உடனடியாக அமல்படுத்த இது வழிவகுக்கும் என்றும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மசோதாவின் முக்கிய அம்சங்கள்:


Leave a Reply