நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: சவரனுக்கு ரூ.400 சரிந்த தங்கம் விலை!

Spread the love

நேற்று ஒரே நாளில் இருமுறை உயர்ந்து அதிர்ச்சியளித்த தங்கம் விலை, இன்று (நவம்பர் 28) சற்று சரிந்து இல்லத்தரசிகள் மற்றும் நகைப் பிரியர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

இன்றைய நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.11,720-க்கு விற்பனையாகிறது. அதன்படி, ஒரு சவரன் (8 கிராம்) தங்கம் ரூ.400 சரிந்து ரூ.93,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேசமயம், வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.170-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,70,000-க்கும் விற்பனையாகிறது.

தொடர் ஏற்றத்திற்குப் பிறகு தங்கம் விலை இன்று குறைந்திருப்பது சாமானிய மக்கள் மற்றும் திருமண வீட்டார் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.