தமிழக சட்டப்பேரவை விதிகளின்படி (விதி 110-ன் கீழ்), பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டு, ரூ.44-ஆக நிர்ணயம் செய்து சட்டசபையில் அறிவித்தார் முதலமைச்சர் விஜய். இந்த அறிவிப்பு பால் உற்பத்தியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஒரு லிட்டர் பால் கொள்முதல் விலை ரூ.41-லிருந்து, மேலும் ரூ.3 உயர்த்தப்பட்டு ரூ.44-ஆக இப்புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கறவை மாடுகளுக்கான தீவனங்கள் மற்றும் இடுபொருட்களின் விலை உயர்ந்துள்ளதால், பால் கொள்முதல் விலையை உயர்த்துவதாக அவர் தெரிவித்தார்.
மேலும், பால் கொள்முதல் விலையை உயர்த்துவதால் ஆவின் நிறுவனத்திற்கு ஏற்படும் கூடுதல் செலவினங்களை அரசே ஏற்கும் என்றும் முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.



Leave a Reply