‘டெல்ஃபி-2எம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஏஐ மாதிரி, நோயாளியின் முந்தைய மருத்துவப் பதிவுகளை ஆய்வு செய்து, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உடல்நலப் பிரச்னைகளின் நிகழ்தகவை கணிக்கிறது. நோயறிதலை வழங்குவதற்குப் பதிலாக, எதிர்கால சுகாதார அபாயங்களை மதிப்பிடுவதே இதன் நோக்கமாகும்.
பிரிட்டனில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மற்றும் டென்மார்க்கில் சுமார் 19 லட்சம் பேரின் தரவுகளைப் பயன்படுத்தி இந்த மாதிரி பயிற்றுவிக்கப்பட்டு சோதிக்கப்பட்டுள்ளது. 1,000-க்கும் மேற்பட்ட நோய்களைக் கணிப்பதில் சராசரியாக 0.76 துல்லியத்தையும், இறப்பு அபாயத்தைக் கணிப்பதில் 0.97 துல்லியத்தையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இளம் வயதினர் உள்ளிட்ட பல்வேறு சமூகக் குழுக்களிடம் இதன் செயல்திறன் மாறுபடக்கூடும். மேலும், திடீர் தொற்று நோய்களைக் கணிப்பதில் வரம்புகள் உள்ளன. தற்போது மருத்துவப் பயன்பாட்டுக்கு தயாராக இல்லாத இந்த ஏஐ, எதிர்காலத்தில் நோய்களைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்கு உதவும் கருவியாக அமையக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.



Leave a Reply