தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் கடந்த சில நாட்களாகக் கடுமையான மதுபான தட்டுப்பாடு நிலவி வருகிறது. சென்னை மட்டுமின்றி திருச்சி, கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள சில்லறை விற்பனை நிலையங்களில் வாடிக்கையாளர்கள் கேட்கும் குறிப்பிட்ட சில பிராண்டுகளும், பீர் வகைகளும் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக, சென்னையில் உள்ள சுமார் 600 கடைகளில் கடந்த சில வாரங்களாகவே கிடங்குகளில் இருந்து கடைகளுக்கு வரும் மதுபான விநியோகம் வெகுவாகக் குறைந்துள்ளதாகவும், ஓட்கா, மெக்டொவல்ஸ் பிராந்தி போன்ற பிரபலமான ரகங்களுக்கு அதிக தட்டுப்பாடு நிலவுவதாகவும் டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். தி.நகர் போன்ற நகரின் முக்கிய இடங்களில் உள்ள கடைகளின் அலமாரிகள் சரக்குகள் இன்றி காலியாகக் காட்சி அளிக்கின்றன. இருப்பினும், விரைவிலேயே புதிய ஆர்டர் முறை அமல்படுத்தப்பட்டு மதுபான விநியோகம் மீண்டும் சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Leave a Reply