முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு, கோவையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்தியாவின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தி, 1984-ஆம் ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி மறைந்தார். இதனையொட்டி, ஆண்டுதோறும் அக்டோபர் 31-ஆம் தேதி அவரது நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திரா காந்தியின் திருவுருவப் படத்திற்கு நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் உறுதிமொழியும் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார், எம்.என்.கந்தசாமி, கோவை செல்வம், மாமன்ற உறுப்பினர் சங்கர், பரமசிவம், அழகப்பன், பாசமலர் சண்முகம், ஜெரிலூயிஸ், ஐ.என்.டி.யூ.சி. பாலசுந்தரம், பிரபு, ரங்கநாதன், தனபால், முருகேஷ், கணபதி, அசோக், பட்டணம் செந்தில், துளசி ராஜன், ராஜமாணிக்கம், பழனிச்சாமி, சுரேஷ், பண்ணாரி உள்ளிட்ட பல காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



Leave a Reply