கடந்த சில நாட்களாகச் சரிவை சந்தித்து வந்த தங்கத்தின் விலை, இன்று சற்று உயர்ந்துள்ளது நகைப்பிரியர்களைக் கவலை அடையச் செய்துள்ளது.
சென்னையில் இன்று (அக்டோபர் 17) நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.13,535-க்கும், ஒரு சவரன் ரூ.160 உயர்ந்து ரூ.1,08,280-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம், வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும்மின்றி, ஒரு கிராம் ரூ.240-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,40,000-க்கும் விற்பனையாகிறது.
அக்டோபர் மாதத் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலையில் தொடர் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு வந்தன. குறிப்பாக கடந்த சில தினங்களில் மட்டும் சவரனுக்குக் கணிசமாக விலை குறைந்து வந்த நிலையில், இன்றைய திடீர் விலை உயர்வு வாடிக்கையாளர்கள் மத்தியில் மீண்டும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளின் பொருளாதாரச் சூழல் மற்றும் உலகளாவிய முதலீடுகள் காரணமாகத் தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.



Leave a Reply