அனிருத் – காவ்யா மாறன் திருமணம்; அதிகாரப்பூர்வத் தகவல் வெளியீடு!

Spread the love
தமிழ் சினிமா மற்றும் கிரிக்கெட் வட்டாரங்களில் சில மாதங்களாகவே பேசப்பட்டு வந்த இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சன் குழுமத்தின் தலைவரான கலாநிதி மாறன் மற்றும் காவேரி மாறன் தம்பதியினர், கடந்த அக்டோபர் 16 அன்று தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்துத் தங்களது மகளின் திருமணத்திற்கு அழைப்பு விடுத்தனர். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, தெலுங்கானா முதல்வர் அலுவலகம் (CMO) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் இவர்களின் திருமணம் குறித்த விவரங்கள் வெளி உலகத்திற்குத் தெரியவந்துள்ளன.

இதன்படி, இசையமைப்பாளர் அனிருத்திற்கும், தொழிலதிபர் கலாநிதி மாறனின் மகளுமான காவ்யா மாறனுக்கும் வருகிற நவம்பர் 21 ஆம் தேதி அன்று சென்னையில் வைத்து கோலாகலமாகத் திருமணம் நடைபெற உள்ளது.
திரையுலகின் ராக்ஸ்டாரும், இந்தியாவின் முன்னணி வணிகக் குடும்பத்தைச் சேர்ந்தவரும் இணைய உள்ள இந்தத் திருமண நிகழ்வில், தென்னிந்தியத் திரைப்படத்துறை பிரபலங்கள், முன்னணி அரசியல் தலைவர்கள் மற்றும் நாட்டின் முக்கியத் தொழிலதிபர்கள் பலர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மணமக்கள் தரப்பிலிருந்து இன்னும் நேரடியான அறிவிப்பு வெளியாகாவிட்டாலும், அரசு தரப்பு உறுதிப்படுத்தியுள்ள இந்தச் செய்தி தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது.