சென்னை சந்தையில் வாரத்தின் முதல் நாளான இன்று (அக்டோபர் 05, 2026) தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் எந்த மாற்றமுமின்றி நேற்றைய விலையிலேயே வர்த்தகமாகி வருகிறது.
கடந்த இரு வாரங்களாகத் தங்கத்தின் விலை சரிவைக் கண்டு வந்த நிலையில், கடந்த வாரத்தில் மட்டும் சவரனுக்கு ரூ.2,600 வரை குறைந்திருந்தது.
இதனால் இந்த வாரத் தொடக்கத்திலும் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாற்றமின்றி நீடிப்பது நகைப் பிரியர்களுக்குச் சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.13,675-க்கும், ஒரு சவரன் ரூ.1,09,400-க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையும் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,45,000-க்கும் விற்பனையாகி வருகிறது.



Leave a Reply