அநீதிக்கு எதிராக ஒரே தளம்: ‘சத்யாகிரகா’ போர்ட்டலை அறிமுகப்படுத்தினார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்!

Spread the love

நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைகளுக்காக நடைபெறும் போராட்டங்கள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் அநீதிகளை ஒரே தளத்தில் கொண்டுவரும் வகையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ‘சத்யாகிரகா’ (Satyagraha) என்ற புதிய டிஜிட்டல் இணையதளத்தைத் தொடக்கியுள்ளார்.

நில உரிமை, பெண்கள் பாதுகாப்பு, தலித் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான உரிமைகள், கல்வி மற்றும் தேர்வு முறைகேடுகள் போன்ற விவகாரங்களுக்கு எதிராகப் போராடுபவர்களை ஒருங்கிணைப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.

பொதுமக்கள் தாங்கள் சந்திக்கும் அநீதி தொடர்பான தகவல்களையும், போராட்டக் கதைகளையும் இந்தத் தளத்தில் பதிவு செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ள ராகுல் காந்தி, அவர்களுக்குத் தேவையான ஆதரவை நாடாளுமன்றத்திலும் வீதிகளிலும் எதிர்க்கட்சியாக நின்று வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *