திராவிட இயக்கத்தின் தூண்களில் ஒன்றான பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுகுணாபுரம் மற்றும் மைல்கல் பகுதிகளில் கழகத்தின் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் உற்சாகமாக நடைபெற்றன.
இவ்விழாவில் முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி, மாலை அணிவித்து தனது மரியாதையைச் செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, சுகுணாபுரம் மைல்கல் பகுதிகளிலும் கழகத்தின் கொடியை அவர் ஏற்றிவைத்தார். அண்ணாவின் புகழையும், அவர் காட்டிய வழியையும் நினைவுகூரும் வகையில், அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் கழகத் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கி பிறந்தநாள் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
இந்தச் சிறப்பு நிகழ்ச்சியில் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள், சார்பு அணிப் பொறுப்பாளர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்களும், பொதுமக்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு அண்ணாவின் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடினர். இவ்விழா அப்பகுதியில் பெரும் உற்சாகத்தையும் எழுச்சியையும் ஏற்படுத்தியது



Leave a Reply