,

மாணவர்களுடன் உணவருந்திய முதல்வர் விஜய்! விரிவாக்கம் செய்யப்பட்ட காமராஜர் காலை உணவுத் திட்டம்!

Spread the love

மாணவர்களின் ஊட்டச்சத்தையும் கற்றலையும் மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ தற்போது 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் அதிகாரப்பூர்வமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை திருவான்மியூர் காந்தி கிராமத்தில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில், பாரம்பரிய உடையில் வருகை தந்த முதலமைச்சர் விஜய், மாணவர்களுக்குச் சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் மற்றும் சாம்பார் பரிமாறி, அவர்களுடன் அமர்ந்து உணவருந்தி இத்திட்ட விரிவாக்கத்தைத் தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் புதிதாக 7,537 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 15.30 லட்சம் மாணவர்கள் பயன்பெறவுள்ள நிலையில், மாநிலம் முழுவதிலும் உள்ள 44,984 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த ஒட்டுமொத்தமாக 34.64 லட்சம் மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைவர்.

இதற்காகக் கூடுதலாக ₹217.63 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மொத்த திட்ட மதிப்பீடு ₹724 கோடியாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இடைத்தேர்தல் நடைமுறையிலுள்ள செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்கள் தவிர்த்து மற்ற அனைத்துப் பகுதிகளிலும் இத்திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *