Category: crime

  • முதலமைச்சரின் தனிச் செயலாளராக உமாநாத் ஐ.ஏ.எஸ். நியமனம்…….!

    முதலமைச்சரின் தனிச் செயலாளராக உமாநாத் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தலைமைச்செயலாளர் முருகானந்தம் வெளியிட்டு உள்ளார். இன்று  முதலமைச்சரின் முதல் தனிச் செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2வது தனிச்செயலாளராக சண்முகம் ஐஏஎஸ், 3வது தனிச் செயலாளராக அனு ஜார்ஜ் ஐஏஎஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். முதலமைச்சரின் முதல் தனிச்செயலாளராக இருந்த முருகானந்தம் ஐஏஎஸ், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்ற நிலையில், இந்த மாற்றம் நடைபெற்றுள்ளது.

  • செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கின் தீர்ப்பை தள்ளி வைத்தது உச்சநீதி மன்றம்……..!

    உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்க ஜாமின் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், அமலாக்கத்துறையினரின் இடையீட்டு மனுவால், அவரது ஜாமின் தள்ளிப் போனது. இந்த  வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, அத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்ததாக அவர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த…

  • செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீட்டை ஆகஸ்ட் 21ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவு….

    அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்த முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு குறித்து பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது. சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் கடந்தாண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி சென்னை  முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல்…

  • சவுக்கு சங்கர் மீதான 16 வழக்குகளின் விசாரணைக்கு தடை! உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு….

    சவுக்கு மீதான  தமிழ்நாடு அரசின் 16 வழக்குகளின் விசாரணைக்கு  தடை விதித்த உச்சநீதிமன்றம்,  சவுக்கு சங்கருக்கு பிணை வழங்கியதற்கு மறுதினமே மீண்டும் அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதா என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டு உள்ளது. பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு எதிரான 16 வழக்குகளின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை தனக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய கோரிய சவுக்கு சங்கரின் ரிட் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் உத்தரவு புதிதாக பதிவு…

  • யூடுயூபர் சவுக்கு சங்கரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை நீதிமன்றம் உத்தரவு….

    யூடுயூபர் சவுக்கு சங்கரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை நீதிமன்றம் உத்தரவு – சவுக்கு சங்கரை அழைத்து வரும் போலீசாரர்கள் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறார்கள் என சவுக்கு சங்கரின் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் பேட்டி. கோவையை சேர்ந்த வழக்கறிஞர் முத்து என்பவர் கடந்த மே 15 ஆம் தேதி யூடுயூபர் சவுக்கு சங்கர் மீது முத்துராமலிங்கத் தேவர் பற்றி அவதூறாக பேசியதாக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் ஆகஸ்ட்…

  • முடிவுக்கு வந்தது பதஞ்சலி நிறுவனத்தின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு….

    பதஞ்சலி நிறுவனத்தின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. புகழ்பெற்ற யோகா குரு பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி’ நிறுவனம், ஆயுர்வேத மருந்துகள், அழகுசாதன பொருட்கள் முதல் உணவுப் பொருட்கள் வரை பல்வேறு தயாரிப்புகளை சந்தைப்படுத்தி வருகிறது. இந்த நிறுவனம் நவீன மருந்துகளுக்கு எதிராக தவறான விளம்பரங்களை செய்து வருவதாக இந்திய மருத்துவ சங்கம் உச்சநீதிமன்ற்த்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பதஞ்சலி நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்ததுடன், தவறான விளம்பரங்களை வெளியிட்டால் அபராதம் விதிக்கப்படும் என…

  • யூடுயூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது……

    கோவையை சேர்ந்த வழக்கறிஞர் முத்து என்பவர் கடந்த மே 15ஆம் தேதி யூடுயூபர் சவுக்கு சங்கர் மீது முத்துராமலிங்கத் தேவர் பற்றி அவதூறாக பேசியதாக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் ஆகஸ்ட் 2ஆம் தேதி சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு சம்பந்தமாக காவலில் எடுத்து மூன்றுநாள் விசாரிக்க ரேஸ்கோர்ஸ் போலீசார் கோவை குற்றவியல் மூன்றாவது கூடுதல் நீதிமன்றத்தில் மனு…

  • ஓய்வுபெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை…

    ஓய்வுபெற்ற காவல்துறை  ஐஜி பொன் மாணிக்கவேல் வீட்டில் இன்று அதிகாலை முதல்  சிபிஐ அதிகாரிகள்  சோதனை நடத்தி வருகின்றனர். முன்னாள் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்தவர் பொன் மாணிக்க வேல். கடந்த 1989-ஆம் ஆண்டு குரூப் 1 அதிகாரியாக தேர்ச்சி பெற்று தமிழக காவல்துறையில் நேரடியாக டிஎஸ்பியாக பணியில் சேர்ந்தவர் பொன் மாணிக்கவேல் . பின்னர் 1996-ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று சேலம் மாவட்ட எஸ்பி, உளவுப்பிரிவு டிஜஜி, சென்னை மத்திய குற்ற பிரிவு…

  • சொத்து குவிப்பு வழக்கு: விடுதலையை ரத்து செய்தது ஐகோர்ட்……!

    சொத்துக் குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோரை விடுவித்த கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் விசாரித்து வந்தது. பின்னர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என அமைச்சர்கள் தரப்பில் தொடரப்பட்ட மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்றம், சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு, அவரது மனைவி மற்றும் அமைச்சர்…

  • பங்களாதேஷில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு…..!

    பங்களாதேஷில் நடைபெற்று வரும் இடஒதுக்கீடு போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் வன்முறைக்கு 98 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் போராட்டம் மற்றும் வன்முறைக்கு இதுவரை 200க்கும் மேற்பட்டவர்கள் பலியானதாகக் கூறப்படுகிறது. 1971ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்ட விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் வழங்கப்பட்ட இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை அடுத்து இந்த போராட்டம் வெடித்துள்ளது.…