கோவை கார்த்திபுரத்தில் வீட்டு மனை வாங்கினால் கட்டுமான பொருள் அனைத்தும் இலவசம்; ஒரே நாளில் 101 வீட்டுக்கான பூமி பூஜை

Spread the love

கோவை காந்திபுரத்தில் வீட்டு மனை வாங்கினால் கட்டுமான பொருள் அனைத்தும் இலவசம்நீலாம்பூர் பகுதியில் அவிநாசி சாலையை ஒட்டி அமைந்துள்ள கார்த்திபுரம் வீட்டுமனைத் திட்டத்தில், இன்று ஒரே நாளில் 101 வீடுகளுக்கான சிறப்பு வாஸ்து பூஜை (23.08.2026, ஞாயிற்றுக்கிழமை) காலை 7.23 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.

கனவு இல்லம் அமைக்க விரும்பும் பொதுமக்களுக்காக திட்டமிடப்பட்டுள்ள கார்த்திபுரம் திட்டத்தின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரபல பட்டிமன்ற பேச்சாளர் மற்றும் திரைப்படக் கலைஞர் ஈரோடு மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வீடு கட்டும் கனவைத் தொடங்கும் வாடிக்கையாளர்களை வாழ்த்தினார்.

வாஸ்து தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இச்சிறப்பு நிகழ்வில், கார்த்திபுரம் திட்டத்தில் வீட்டுமனைகளை வாங்கிய முதல் 101 வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு, தங்களது கனவு இல்லத்திற்கான கட்டுமானப் பணிகளை தொடங்குவதற்கான சிறப்பான தருணத்தை கொண்டாடினர்.

அவிநாசி ரோடு – நீலாம்பூர் பகுதியில், கதிர் இன்ஜினியரிங் கல்லூரி சாலை அருகே அமைந்துள்ள கார்த்திபுரம், குடியிருப்பு மற்றும் வணிக பயன்பாட்டிற்கான வீட்டுமனைகள் மற்றும் வணிக மனைகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த திட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு, சாலை வசதிகள், பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை மற்றும் நவீன கட்டமைப்பு வசதிகளுடன் திட்டமிடப்பட்டுள்ளதாக கார்த்திபுரம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற வாஸ்து பூஜை நிகழ்வில் கார்த்திபுரம் வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் மற்றும் நிர்வாகத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தற்போது கார்த்திபுரம் திட்டத்தில் வீட்டுமனைகள் மற்றும் வணிக மனைகளுக்கான விற்பனை மற்றும் முன்பதிவு நடைபெற்று வருகிறது.

தொடர்புக்கு:
95005 02400

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *