தீபாவளியை முன்னிட்டு ஆனந்தாஸ் ஸ்வீட்ஸின் ‘பிக் தீபாவளி திருவிழா’; நவ. 4 முதல் 7ஆம் தேதி வரை சிறப்பு விற்பனை!

Spread the love

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, ஆனந்தாஸ் ஸ்வீட்ஸ் சார்பில் ‘பிக் தீபாவளி திருவிழா’ எனும் சிறப்பு விற்பனை நவம்பர் 4ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

கோவை, சென்னை, திருச்சி, ஈரோடு, பாலக்காடு மற்றும் கொச்சி உள்ளிட்ட நகரங்களில் உள்ள ஆனந்தாஸ் ஸ்வீட்ஸ் கிளைகளில் இந்தத் திருவிழா நடைபெறுகிறது.

தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள 40-க்கும் மேற்பட்ட கிளைகளிலும் வாடிக்கையாளர்கள் இந்தச் சிறப்பு தீபாவளி விற்பனையில் பங்கேற்கலாம் என்றும், தீபாவளிப் பண்டிகையின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் வகையில், பாரம்பரியச் சுவையுடன் புதுமையான இனிப்பு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆனந்தாஸ் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குப் பரிசளிக்கும் வகையில், பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட பிரைம் (Prime), நோபல் (Noble), ஹெரிடேஜ் (Heritage) மற்றும் ஃபெஸ்டிவ் மொமென்ட்ஸ் (Festive Moments) எனப் பல்வேறு சிறப்பு இனிப்புப் பரிசுத் தொகுப்புகளும் வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

தரமான இனிப்புகள், தனித்துவமான சுவைகள் மற்றும் புதுமையான தயாரிப்புகள் மூலம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்று வரும் ஆனந்தாஸ் ஸ்வீட்ஸ், ஒவ்வொரு பண்டிகையையும் மகிழ்ச்சியான அனுபவமாக மாற்றுவதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளியைக் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் இனிமையாகக் கொண்டாடும் வகையில், பல்வேறு இனிப்பு வகைகளையும் சிறப்புப் பரிசுத் தொகுப்புகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஆனந்தாஸ் நிர்வாகம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.

இந்தத் தீபாவளி அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, வளம் மற்றும் இனிமையை நிறைக்கட்டும் என வாழ்த்தி, அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *