இந்திய ராணுவம் வெற்றிகரமாக நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை கொண்டாடும் வகையிலும், ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நோக்கத்திலும் பாஜக சார்பில் கோவையில் புதன்கிழமை சிறப்பான ஊர்வலம் நடத்தப்பட்டது.
கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில், தேசியக்கொடியுடன் தொடங்கப்பட்ட இந்த ஊர்வலம், கணபதி பேருந்து நிறுத்தத்திலிருந்து கண்ணப்பன் நகர் வரை அமைதியாக நடைப்பெற்றது.
பேரணியில் பாஜக கோவை மாவட்ட தலைவர் ரமேஷ்குமார், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர். ஜெயராம், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், சின்னவேடம்பட்டி கௌமார மடாலயத்தின் குமரகுருபர சுவாமிகள்,நாக சக்தி பீடம் பாபுஜி சுவாமிகள், ஆன்மீகவாதிகள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பாஜக தொண்டர்கள் உள்ளிட்ட பலர் உற்சாகமாக பங்கேற்றனர்.

இந்த ஊர்வலத்தின் சிறப்பு அம்சமாக பிரமோஸ் ஏவுகணை மாதிரி மற்றும் ராணுவ வீரர் அமைப்பை பிரதிபலிக்கும் மாதிரிகள் அழகாக வடிவமைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



Leave a Reply