கோவையின் பழமை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றான கோட்டை ஈஸ்வரன் கோவில் திருத்தேர் 32 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக திருவீதி உலா வந்தது, கோவை மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கரிகால் சோழன், தற்போது உள்ள கோவில் பகுதியில், கோட்டை கட்ட முயன்றான். அப்போது நிலத்தில் சிவலிங்கம் ஒன்று தென்பட்டது.அது குறித்து மன்னன் ஆராய்ச்சி செய்த போது, அது சங்கீசுவரமுடையார் என பெயர் பெற்ற லிங்கம் தெரிந்து கொண்டான்.பின் முறைப்படி அங்கு கோவில் எழுப்பினான்.
அதுவே தற்போது அகிலாண்டேஸ்வரி உடனமர் சங்கமேஸ்வரர் ஆலயமாக திகழ் ந்து வருகிறது.
பல இடர்களால் நின்று போன சித்திரைத் திருவிழா 32 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக மிகச் சிறப்பாக நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான அம்மையப்பர் திருக்கல்யாணத்தை அடுத்து, 35 அடி உயரமுள்ள திருத்தேரில் அகிலாண்டேஸ்வரியும், சங்கமேஸ்வரரும் எழுந்தருளினர்.
பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், காமாட்சிபுரி ஆதீனம், உள்ளிட்டோர் தேரினை வடம் பிடித்து துவக்கி வைத்தனர். ஈஸ்வரன் கோவில், பெருமாள் கோவில் வீதிகள், என்எச் ரோடு, டவுன்ஹால் வழியாக திருவீதி உலா வந்து, நிலையை அடைந்தது.
சங்கநாதம், முளைப்பாரி, கோலாட்டம், கும்மி ஆட்டம் ,10-க்கும் மேற்பட்ட கைலாய வாத்திய குழுவினர், அடியார் பெரு மக்கள், தேவாரம், திருவாசகம் பாட அம்மையப்பர் திருவீதி உலா வந்தது, கண்கொள்ளாக் காட்சி களாக அமைந் திருந்தது.
கோவில் அறங்காவல் குழு தலைவர் ராஜசேகர், செயல் அலுவலர் நாகராஜன் உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
கோட்டை ஈஸ்வரர் திருத்தேர் உலா – பக்தர்கள் ஆரவாரம் : உற்சாகம்..!



Leave a Reply