, , ,

கோவையில் தர்மேந்திர பிரதான் உருவ பொம்மை எரிப்பு

effigy
Spread the love

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில், தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுக்கப்பட்ட விவகாரத்தை தி.மு.க. எம்.பி.க்கள் கடுமையாக எதிர்த்து அமளியில் ஈடுபட்டனர். இதற்கு பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுவதாக கூறுவது தவறானது என தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டு மாணவர்களை தி.மு.க. அரசியல் நோக்கத்திற்காக தவறாக வழிநடத்துகிறது என்றும், மாநில அரசு மாணவர்களின் எதிர்காலத்தை பாழ்படுத்துகிறது என்றும் குற்றம்சாட்டினார்.

தர்மேந்திர பிரதானின் இந்த கருத்துக்கு எதிராக, கோவையில் தி.மு.க. சார்பில் உருவ பொம்மை எரிக்கும் போராட்டம் நடைபெற்றது. காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே, அண்ணாசிலை முன்பு, மத்திய அமைச்சருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி, அவரது உருவ பொம்மையை எரித்தனர். இந்த போராட்டத்தில், கோவை மாநகர் மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்தி தலைமையில் தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.