பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கூட்டணி குறித்து தாம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் தெளிவாக கூறியிருப்பதை, அ.தி.மு.க பெயரை எங்கும் குறிப்பிடவில்லை என்பதை வலியுறுத்தினார். விவாதம் (Debate) ஏற்படுத்தவே சிலர் திட்டமிட்ட முறையில் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கிறார்கள் என அவர் குற்றம்சாட்டினார்.
“நான் கூறிய கருத்துகளையும், எடப்பாடியார் தெரிவித்த கருத்துகளையும் திரித்து, வாதம் செய்யவே சிலர் முயற்சி செய்கிறார்கள். பாஜக குறித்து நான் தெளிவாக எடுத்துரைத்துள்ளேன், அதேபோல் எடப்பாடியாரும் அ.தி.மு.க குறித்து தன்னுடைய நிலைப்பாட்டை விளக்கி விட்டார்” என்று அவர் கூறினார்.
அண்ணாமலை அரசியல் விமர்சகர்கள் நடுநிலையாக பேசுவதில்லை என குற்றம் சாட்டினார். “அவர்களின் ஒரே நோக்கம் பாஜகவை குறை கூறுவதே” என்றும், “அவர்களுக்கு திமுகவின் வெற்றியே முக்கியம்” என்றும் விமர்சித்தார்.
“எந்த கூட்டணி வரவேண்டும் என்பதைக் கூட அரசியல் விமர்சகர்களே தீர்மானிக்க முயல்கிறார்கள். அப்படி என்றால், நானும் எடப்பாடியாரும் எவ்வாறு தொடர்ந்தும் இதைப் பற்றிப் பேச முடியும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர், “பத்திரிகையாளர்கள் உண்மையான நிலைமைகளை நேரில் காண்பதால் அவர்களுக்கு கள நிலவரம் தெரியும். ஆனால், விமர்சகர்கள் என்ன தெரியும்? அவர்கள் ஏ.சி அறையில் உட்கார்ந்து பத்திரிகையில் ஒரு காலம் (column) எழுதுவதைத்தவிர வேறு என்ன செய்கிறார்கள்?” என ஆவேசமாக கருத்து தெரிவித்தார்.
Leave a Reply