நடிகர் அஜித் குமார், தனது அஜித் குமார் ரேசிங் குழுவுடன் உலகளாவிய கார் பந்தயங்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இந்நிலையில், ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் நடைபெற்ற கார் பந்தயத்தின்போது, அவர் தனது முந்தைய சாதனையை முறியடித்து புதிய ரெக்கார்டை பதிவு செய்துள்ளார்.
அஜித் முன்பு ஒரு சுற்றை 1.51 நிமிடங்களில் முடித்திருந்த நிலையில், தற்போது அதே சுற்றை 1.47 நிமிடங்களில் முடித்து, தனது சொந்த சாதனையை தானே மீறியுள்ளார். இதனை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா வீடியோவுடன் பகிர்ந்து உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், முன்னணி கார் பந்தய வீரர்களின் சாதனைக்கும், அஜித்தின் புதிய சாதனைக்கும் வெறும் 4 நொடிகள் மட்டுமே வித்தியாசம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த லேப்பில் அஜித் 270 கிமீ வேகத்தில் காரை செலுத்திய காட்சிகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக உற்சாகப்படுத்தியுள்ளது.
Leave a Reply