கடந்த 1955 ஆம் ஆண்டு, கோவையைச் சேர்ந்த . பி.சபாபதி என்பவர் தனது மனைவி இந்திராணிக்கு திருமணப் பரிசாக வெட் கிரைண்டரைக் கண்டுபிடித்தார்.
சபாபதியின் கண்டுபிடிப்பு கோவையில் உள்ள ஒரு சிறிய தெருவில் வசிப்பவர்களின் வாழ்க்கையை எளிதாக்கியது, ஏனெனில் இந்திராணி தனது பக்கத்து வீட்டுக்காரர்கள் அனைவரையும் மாவு அரைக்கக தனது கணவர் கண்டுபிடித்த கிரைண்டரைப் பயன்படுத்த அனுமதித்தார். பின்னர் அவர் வெட் கிரைண்டர்களில் அவர் 34 வெவ்வேறு மாடல்களைக் கண்டுபிடித்தார். துரதிர்ஷ்டவசமாக, அவரது குடும்பத்தைச் சேர்ந்த யாரும் இப்போது கிரைண்டர் தொழிலில் தீவிரமாக இல்லை. 1963 ஆம் ஆண்டு பி.பி.கிருஷ்ணமூர்த்தி என்பவர் லட்சுமி வெட் கிரைண்டர்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். பின்னர், இந்த நிறுவனம் இந்தியாவில் மிகவும் பாப்புலரான பிராண்டாக மாறியது வரலாறு.
பின்னர் ஆர்.துரைசாமி என்பவர் சாய்க்கும் வெட் கிரைண்டரை (TILTING WET GRINDER ) அறிமுகப்படுத்தினார். இதனால், பெண்கள் முன்பு செய்ய வேண்டிய கனமான கல்லைத் தூக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது .இறுதியாக, எல்.ஜி. நாட்டின் முதல் டேபிள் டாப் கிரைண்டரான ELGI அல்ட்ராவை அறிமுகப்படுத்தியது. இன்று கோவை நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வெட் கிரைண்டர்களை உற்பத்தி செய்கின்றன. ஆனால், இதற்கு விதை போட்டது சபாபதி என்றால் மிகையல்ல.
கிரைண்டர்கள் வாழ்க்கையை எளிதாக்கியது மட்டுமல்லாமல், இட்லி , தோசை போன்ற உணவுகளை இந்தியா முழுவதும் மற்றும் உலகின் பல பகுதிகளுக்கும் கொண்டு சேர்த்தது.
கோயம்புத்தூர் வெட் கிரைண்டர் என்பது இப்போது கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் தயாரிக்கப்படும் வெட் கிரைண்டர்களுக்கான புவியியல் குறியீடாக (ஜிஐ) உள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் உற்பத்தி செய்யப்படும் ஒரு லட்சம் வெட் கிரைண்டர்களில் சுமார் 75,000 கோவையில் உற்பத்தி செய்யப்படுகிறது.GI இருப்பதால், கிரைண்டர்களுக்கான காப்புரிமையை உலகில் வேறு யாரும் பெற முடியாது. இதனால், வெட்கிரைண்டர் கோவையை சேர்ந்தது என்று அடித்து சொல்லலாம்.
Leave a Reply