,

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சிறுதுளி அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

siruthuli
Spread the love

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் “சிறுதுளி” அமைப்பு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.
கோவை உக்கடம் புறவழிச் சாலையில் அமைந்துள்ள சிறுதுளி நொய்யல் வாழ்வியல் மையத்தில், புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமிநாராயணசுவாமி, சிறுதுளி அமைப்பின நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் ஆகியோர் கையொப்பமிட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சமூகப்பணியியல் துறை மாணவர்களுக்கு, சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வு கல்வி கற்பிக்கப்படும். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, இயற்கைப் பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் பாதுகாப்புத் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. திடக்கழிவு மேலாண்மை மற்றும் அதை அனைத்து தரப்பிலும் பயனுள்ள வகையில் செயல்படுத்தும் வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். மழைநீர் சேகரிப்பின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்குக் கற்பிக்கப்படும். கோவை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாணவர்களை ஈடுபடுத்துவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார், சமூகப்பணியியல் துறைத்தலைவர் ஆர்.பிரியதர்ஷினி, சிறுதுளி அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சி.சின்னச்சாமி,  சுஜினி பாலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.