,

பைந்தமிழ் பாரி வீட்டில் கர்நாடக லோக் ஆயுக்தா காவல்துறை சோதனை

lokayuktha
Spread the love
திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் மகனான பைந்தமிழ் பாரி வீட்டில் கர்நாடக லோக் ஆயுக்தா காவல்துறை சோதனை நடத்தினர்.

திமுக விளையாட்டு அணி மாநில துணைச் செயலாளராக பொறுப்பில் இருப்பவர் பைந்தமிழ் பாரி. இந்நிலையில் கோவை கிருஷ்ணா காலனியில் உள்ள பைந்தமிழ் பாரி  வீட்டில்  15 பேர் கொண்ட கர்நாடகா லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தினர். கர்நாடகாவில் பைந்தமிழ் பாரி மற்றும் அவரது தந்தை பொங்கலூர் பழனிச்சாமி ஆகியோர் கல்குவாரி வைத்து தொழில் செய்து வரும் நிலையில் கல்குவாரி முறையாக நடத்தாமல் விதிமுறைகளை மீறி செயல்படுத்தி உள்ளதாக கூறி  கர்நாடக பதிவு எண் கொண்ட இரண்டு வாகனங்களில் வந்த அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.