டேஸ்ட் அட்லஸ் வெளியிட்டுள்ள உலகின் டாப் 10 வறுத்த சிக்கன் உணவுகளில், தமிழ்நாட்டில் உருவான ‘சிக்கன் 65′, மூன்றாம் இடம் பிடித்துள்ளது.
புகழ்பெற்ற உணவு வழிகாட்டியான டேஸ்ட் அட்லஸ் , உலகின் 10 சிறந்த வறுத்த சிக்கன் உணவுகள் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. அதில் அசைவ உணவு உண்பவர்கள் இதயத்தில் தனி இடம்பெற்றிருக்கும் பொரித்த கோழிக்கறி (சிக்கன் 65) மூன்றாம் இடம் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் தென்கொரியாவின் சிக்கன் முதலிடத்தில் உள்ளது.
ஜப்பானின் கராஜ் என்ற உணவு இரண்டாம் இடம் பிடித்துள்ளது. பத்தாவது இடத்தில் அமெரிக்காவின் ஆரஞ்ச் சிக்கன் இடம்பிடித்துள்ளது. 1965ம் ஆண்டு சென்னையில் உள்ள பிரபல புஹாரி உணவகம்தான் முதன்முதலில் ‘சிக்கன் 65’-ஐ அறிமுகம் செய்தது குறிப்பிடதக்கது.
Leave a Reply