, , , , ,

தவெகவின் புதிய டிவி சேனல் ‘தமிழ் ஒளி’ விஜய் அடுத்த அதிரடி!

vijay
Spread the love

சமீபத்தில் நடிகர்  விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் புதிய  கட்சியை தொடங்கினார்.  அவர் தனது முதல் அரசியல் மாநாட்டை தொடங்கி அதில் தனது கட்சி கொள்கைகள், கோட்பாடுகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.  மாநாட்டில் 10லட்சம் பேர் கலந்து கொண்ட நிலையில்  மாநாடு பற்றிய பேச்சுக்கள் தற்போது வரை தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

 

முதலில் கட்சிப் பெயர், கட்சிக் கொடி, கட்சிப்பாடல் இவைகளை அறிமுகம் செய்தார்.  தற்போது தவெகவின் தொலைக்காட்சி சேனலையும் அறிமுகம் செய்ய இருப்பதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான ஆலோசனையில் நடிகர் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்  வெளியாகும் எனத் தெரிகிறது. தற்போது தவெக கட்சியின் தொலைக்காட்சி சேனல் பெயர் குறித்த கருத்துகள் , பெயர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில்    ‘தமிழ் ஒளி’ எனும் பெயர் அதிகம் பேரால் பேசப்படுகிறது.  இதனை தவெக செய்திகள் சமூக வலைதள பக்கம் பதிவிட்டு, இது உண்மையானால் மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளது. மேலும், வாகை, வெற்றி உட்பட பல  பெயர்களும் பரிசீலனையில் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தவெக அரசியல் கட்சி 2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்து நகர்த்தப்படுகிறது. இதனால்  விரைவில் அடுத்தடுத்த அதிரடி ஆட்டங்கள் ஆரம்பமாகலாம்  என எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தவெக மாவட்ட நிர்வாகிகளுடன் விஜய், பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியது  குறிப்பிடத்தக்கது.