, , ,

ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் 8 மாத குழந்தையின் தொண்டையில் சிக்கிய வெள்ளி மெட்டி அகற்றம்

Spread the love

கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனையில் 8 மாத குழந்தையின் தொண்டையில் சிக்கிய வெள்ளி மெட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது

இரண்டு நாட்களுக்கு மேலாக உணவு உட்கொள்வதில் சிரமம் மற்றும் மூச்சுத்திணறல் ஆகிய பிரச்சனைகளால் அவதிப்பட்ட எட்டு மாத ஆண் குழந்தை கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

குழந்தைக்கு சி.டி.ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே பரிசோதனைகள் செய்யப்பட்டதில் குழந்தையின் மூச்சுக்குழாய் மற்றும் உணவுக்குழாய் இடையே ஒரு வெள்ளி மெட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து இ.என்.டி  அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்.கோபிநாத் மற்றும்  குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். ராஜமணி ஆகியர் மருத்துவர்கள் எண்டோஸ்கோபி முறையைப் பயன்படுத்தி வெற்றிகரமாக இந்த வெள்ளி மெட்டியை அகற்றினர்.  சிகிச்சைக்குப் பிறகு குழந்தை நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது போன்ற சம்பவங்கள் குழந்தைகளுக்கு ஆபத்தானது என்பதால், பெற்றோர்கள் குழந்தைகளை கவனமாக கண்காணிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். சிறிய பொருட்களை குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத இடங்களில் வைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.