, ,

கட்சி கொடியை அறிமுகம் செய்கிறார் நடிகர் விஜய்………

Spread the love

த.வெ.க கட்சியின் முதல் மாநாடு செப்டம்பர் மாதம் நடத்த திட்டம். பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில், கட்சி கொடியை விஜய் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல். தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியை வரும் 22ம் தேதி விஜய் அறிமுகம் செய்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் மாநாட்டை செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் முன்கூட்டியே விஜய் கட்சியின் கொடியை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில், மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகளின் முன்னிலையில் கட்சி கொடியை விஜய் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கட்சிக் கொடியினை ஆகஸ்ட் 22 ஆம் தேதி, நடிகர் விஜய் அறிமுகம் செய்து வைக்க இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த கட்சிக் கொடியினை சென்னை அடுத்த பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து எளிமையான முறையில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல கட்சியினுடைய முதல் மாநாடு செப்டம்பர் மாதம் இறுதிக்குள் நடத்துவதற்கான, அடுத்த கட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிற கொள்கையை முன்மொழிந்துள்ள விஜய், கட்சியின் கொள்கைகளுக்கு ஏற்ப, அனைவரும் சமம் என்கிற வகையில் கட்சிக்கொடி இருக்க வேண்டும் என விஜய் அறிவுறுத்தி இருந்தார். இந்த நிலையில் தற்போது கட்சியின் கொடியினை நடிகர் விஜய் பனையூரில் இருக்கக்கூடிய கட்சி அலுவலகத்தில் வைத்து அறிமுகம் செய்து வைக்க இருக்கிறார். தொடர்ந்து தவெகவின் முதல் மாநாட்டினையும் அடுத்த மாதம் நடத்த திட்டமிட்டுள்ளார்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் தனது கடைசி படத்தில் நடித்து முடித்த பிறகு, முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.