தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடைபெற்றது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 3,302 தேர்வு மையங்களில் நடந்தது பிளஸ் 2 பொதுத்தேர்வில் 7 ஆயிரத்து 534 பள்ளிகளில் படித்த 7 லட்சத்து 80 ஆயிரத்து 550 மாணவர்கள், தனித்தேர்வர்கள் 8 ஆயிரத்து 190 மாணவர்கள் என மொத்தம் 7 லட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் உள்ள 75 மையங்களில் நடைபெற்றது.இந்நிலையில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம் தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply