திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த விவகாரத்தில் முதல்வர் விஜய் மௌனம் கலைத்து தனது நிலைப்பாட்டைத் தெளிவு படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், திருப்பரங் குன்றம் தீபத்தூண் விவகாரம் எழுந்தபோது தவெக தலைவர் விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார். இருப்பினும், இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. தீபம் ஏற்றும் விவகாரத்தில் தவெக அரசின் நிலைப்பாடு ஆதரவா, எதிர்ப்பா என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றார்.
மேலும், கடந்த ஆண்டு திமுக அரசு உச்சநீதிமன்றத்தில் முன் வைத்த வாதங்களுக்கும், தற்போது தவெக அரசு முன்வைக்கும் வாதங்களுக்கும் வேறுபாடு இருப்பதாகக் குறிப்பிட்டார். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது மதவாதச் செயலல்ல; அது மக்களின் உரிமை சார்ந்த கோரிக்கை என்றும் தெரிவித்தார்.திமுக, தவெக அரசுகளின் செயல் பாடுகளில் எந்த மாற்றமும் இல்லை என விமர்சித்த அண்ணாமலை, உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். அதற்குத் தடையாக இருக்கக் கூடாது. தவெக அரசுக்கு அவகாசம் கொடுக்க வேண்டும் என்று கூறி வந்த நிலையில், இப்போதாவது முதல்வர் விஜய் இந்த விவகாரத்தில் வெளிப்படையாகப் பேச வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் மௌனம் ஏன்? – அண்ணாமலை கேள்வி!



Leave a Reply