நாடு முழுவதும் உள்ள தேசிய பஞ்சாலைக் கழகத்துக்குச் (என்.டி.சி.) சொந்தமான ஆலைகளின் சொத்து மதிப்பு ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ள நிலையில், அவற்றைப் பராமரிக்காமல் வீணடிப்பதுடன், ஆலை இயந்திரங்கள் திருடப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும் தொழிற்சங்கத்தினர் குற்றஞ் சாட்டியுள்ளனர்.
கோவை ராமநாத புரத்தில் உள்ள தொமுச அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தொமுச மாநிலப் பொதுச் செய லாளர் பார்த்தசாரதி கூறியதாவது:
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில், 1974-ஆம் ஆண்டு நாடு முழுவதும் மூடப்பட்ட 128 தனியார் பஞ்சாலைகளை மத்திய அரசு கையகப்படுத்தி, தேசிய பஞ்சாலைக் கழகத்தின் கீழ் கொண்டு வந்தது. இதன் மூலம் சுமார் 3 லட்சம் தொழிலா
ளர்களுக்கு வாழ்வாதாரம் கிடைத்தது.
கோவையில் உள்ள ரங்கவிலாஸ் பஞ்சாலைக்கு 1975-ஆம் ஆண்டு ரூ.18 லட்சம் மட்டுமே இழப்பீடாக வழங்கப்பட்டது. ஆனால், தற்போது அந்த ஆலையின் சொத்து மதிப்பு ரூ.4,000 கோடிக்கும் அதிகமாக உள்ளது. நாடு முழுவதும் உள்ள என்.டி.சி. ஆலை
களின் சொத்து மதிப்பு ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு கரோனா பொது
முடக்கத்தின்போது தற்காலிகமாக நிறுத்தப்
பட்ட ஆலைகள், பல ஆண்டு
களாகியும் முழுமை யாக மீண்டும் இயக்கப்பட வில்லை. இதனால், பல கோடி ரூபாய் மதிப்பி லான இயந்திரங்கள் பராமரிப் பின்றி துருப்பிடித்து வீணாகி வருகின்றன.
மேலும், சில ஆலை களில் உள்ள இயந்திரங்களை அதிகாரிகளே திருடி விற்பனை செய்வதாகப் புகார்கள் எழுந்துள்ளன. அவிநாசி சாலையில் உள்ள ரங்கவிலாஸ் ஆலையில் இருக்கும் தென்னை மரங்களில் கிடைக்கும் தேங்காய்களைக்கூட முறையாகக் கணக்கிட்டு விற்பனை செய்யாமல் முறைகேடாகப் பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆலைகளில் பணியாற்றிய தொழிலாளர் களுக்கு கடந்த பல ஆண்டு களாக போனஸ், ஊதிய உயர்வு உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படவில்லை. ஓய்வுபெற்ற தொழிலாளர் களுக்கான பணிக்கொடை உள்ளிட்ட சட்டப்பூர்வப் பணப்பலன்களும் நிலுவையில் உள்ளன.
தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், மூடப்பட்டுள்ள
என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்க வேண்டும். அதற்கு வாய்ப்பில்லாத பட்சத்தில், தொழிற்சங்கங்களிடம் ஆலைகளை ஒப்படைத்து இயக்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், தொழி லாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்குவதுடன், ஆலைச் சொத்துகள் மற்றும் இயந்திரங்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
ரூ.1 லட்சம் கோடி சொத்துகள்… வீணாகும் என்.டி.சி. ஆலைகள் இயந்திரங்கள் மாயமாவதாகப் தொழிற்சங்கத்தினர் புகார்!



Leave a Reply