சாஹோதயா தடகளப் போட்டி: நேஷனல் மாடல் பள்ளி ஒட்டுமொத்தப் பிரிவில் இரண்டாம் இடம்!

Spread the love

கோவை, பீளமேடு நேஷனல் மாடல் மேல்நிலைப் பள்ளி, நேரு விளையாட்டு அரங்கில் நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெற்ற 47-வது கோவை சாஹோதயா மாவட்டங்களுக்கு இடையிலான தடகளப் போட்டியில் சிறப்பான சாதனை படைத்தது.
ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 118 பள்ளிகளின் 3,700 வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற இப்போட்டியில், நேஷனல் மாடல் பள்ளி 8 தங்கம், 11 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களைக் குவித்தது.
மேலும், 183 புள்ளி களுடன் ஒட்டுமொத்தப் பிரிவில் இரண்டாம் இடத்தையும், மாணவர்கள் பிரிவில் 102 புள்ளிகளுடனும், மாணவிகள் பிரிவில் 81 புள்ளிகளுடனும் இரண்டாம் இடத்தைப் பெற்றது.
வீரர், வீராங்கனைகளின் அர்ப்பணிப்பு, பயிற்சி யாளர்களின் வழி காட்டுதல், உடற்கல்வித் துறை, பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் ஆதரவே இந்தச் சாதனைக்குக் காரணமாக அமைந்தது.