,

தீ விபத்தில்லா தீபாவளி: பொது சுகாதாரத்துறை இயக்குநர் வெளியிட்ட பாதுகாப்பு வழிகாட்டுதல்கள்!

Spread the love

தீபாவளிப் பண்டிகையைக் விபத்துகள் இன்றிப் பாதுகாப்பாகக் கொண்டாடும் வகையில், பொது சுகாதார மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குநர் சோமசுந்தரம் மாவட்ட மருத்துவ அதிகாரிகளுக்குச் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இப்பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமான பாதுகாப்பு முறைகள் மற்றும் செய்யக் கூடாதவை குறித்து அதில் விளக்கப்பட்டுள்ளது:

செய்ய வேண்டியவை (Do’s):

  • தீபாவளி கொண்டாட்டத்தின்போது குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

  • திறந்த வெளியில் பட்டாசுகளை வெடிப்பதற்கு முன் சுற்றி எரியக்கூடிய பொருள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

  • தீபாவளியின்போது சுவாசப் பிரச்சனை உள்ளவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும்.

  • வெளியே வரக்கூடாது; விபத்து ஏற்பட்டால் தீ தீவிரமடையாமல் தடுக்கத் தண்ணீர் வாலிகளை வைத்திருக்க வேண்டும்.

  • பயன்படுத்தப்பட்ட பட்டாசுகளை வாளி தண்ணீரில் போட்டு அகற்றுப்படுத்த வேண்டும்; இல்லையெனில், யாரேனும் மிதித்து கால்களில் காயம் ஏற்பட வாய்ப்புள்ளது.

  • பட்டாசுகளை வெடித்த பிறகு ஒவ்வொரு முறையும் சோப்பு மற்றும் தண்ணீரால் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும்.

செய்யக் கூடாதவை (Don’ts):

  • கையில் பட்டாசுகளை கொளுத்தித் தூக்கி எறியக்கூடாது; மின்கம்பங்கள் மற்றும் கம்பிகளுக்கு அருகில் ஒருபோதும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.

  • பாதி எரிந்த பட்டாசுகளை தூக்கி வீசக்கூடாது; அவை எரியக்கூடிய பொருளின் மீது விழுந்து தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது.

  • பட்டாசுகளை வெடிக்க லைட்டர்கள் பயன்படுத்துவதை கண்டிப்பாகத் தவிர்க்கவும்.

  • பொதுமக்கள் மீது பட்டாசுகளை வீசக்கூடாது.