கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கலைப் பிரிவு சார்பில் சிவாஜி கணேசனின் 99-வது பிறந்தநாள் விழா சிவானந்தா காலனியில் நடைபெற்றது.
மாவட்ட கலைப் பிரிவு தலைவர் பறக்கும் படை ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் பொதுச் செயலாளர் சிவ ஐயப்பன், பொருளாளர் கோவை பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் கோவை மாநில பொறுப்பாளர் எஸ். ராஜ்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், கோவை மாநகர் மாவட்ட தலைவர் பி. விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில பொதுச் செயலாளர் பி.எஸ். சரவணகுமார் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.மேலும், விழாவையொட்டி மாணவ, மாணவியர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.நிகழ்ச்சியில் சௌந்தர்குமார், டென்ஷன் ராஜா, கவுன்சிலர் காயத்ரி, வழக்கறிஞர் செந்தில்குமார், வெற்றிலை கருப்புசாமி, சந்திரசேகர், ரூபட், கிருஷ்ணவேணி, முருகவேல், அமுல்ராஜ், முரளி, சரவணகுமார், புதுப்பாலம் ஆறுமுகம், நூறாவது வார்டு கருப்புசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



Leave a Reply