கோயம்புத்தூர் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் 2026–2029ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.
கடந்த 1971ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இச்சங்கம், 1995ஆம் ஆண்டு வெள்ளிவிழாவையும், 2023ஆம் ஆண்டு பொன்விழாவையும் கடந்து தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சங்கத் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்று பதவியேற்றனர். இதில், தலைவர் சி. வி. தம்பிதுரை, துணைத் தலைவர் வி.பி.எஸ். ரவிவரன்,செயலாளர் எஸ்.என். குமார்,பொருளாளர் பி. கோவிந்தராஜன், இணைச் செயலாளர் எம்.அருள்வேல் ஆகியோர் 2026 முதல் 2029ஆம் ஆண்டு வரையிலான காலத்திற்கு பொறுப்பேற்றுக் கொண்டனர்.
மேலும், சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களாக கே.எஸ். ஆறுமுகம்- ராமலட்சுமி பிலிம்ஸ், எஸ். செல்வராஜ் – பிரகதீஸ் பிக்சர்ஸ், ஜி. திருமூர்த்தி – ஸ்ரீ காமாட்சி பிக்சர்ஸ், கே. எஸ். ஆறுமுகம் – மருதமலை மீடியாஸ், பி. சிவசாமி – ஸ்ரீ தாரிகா பிலிம்ஸ், பி. தண்டபாணி – வசந்தி பிலிம்ஸ், எஸ். சாதிக் – S.S. பிலிம்ஸ் உள்ளிட்டோர் பதவியேற்றனர்.
தேர்தல் பொறுப்பாளர்களாக வி. பாலகிருஷ்ணன் – ஸ்ரீ அம்மன் பிக்சர்ஸ், ஆர். சஞ்சீவ் குமார் – ஜெய் கம்பைன்ஸ், பி. முருகேசன் – நண்பர்கள் மூவீஸ் உள்ளிட்டோரும், மேலாளராக “காசி மஹா ஸ்ரீ” மூகாம்பிகை பிலிம்ஸ் பழனிசாமி ஆகியோரும் உறுதிமொழி ஏற்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.
புதிய நிர்வாகிகளுக்கு சங்க உறுப்பினர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.



Leave a Reply